அரசியல் எனக்கு பொழுதுபோக்கல்ல.? 100 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு அரசியலில் இறங்க இதுதான் காரணம்.? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய்..
நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் களமிறங்க இருப்பதாக மறைமுகமாக சொல்லிக் கொண்டிருந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக தன்னுடைய கட்சியின் பெயரை வெளியிட்டு அரசியலில் இறங்கி உள்ளார்.
அதன்படி கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்தது மட்டுமல்லாமல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் போட்டி இல்லை என்றும் யாருக்கும் ஆதரவு கொடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்
எங்களுடைய நோக்கம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குறி வைத்து தனது கட்சி செயல்படும் என்று அவர் அறிவித்திருந்தார். மேலும், வடிவில் விஜயின் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட
இந்த இரண்டு திரைப்படத்தை மட்டும் நடித்துவிட்டு முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட இருப்பதாக நடிகர் விஜய் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர்களை ஏற்றுள்ள அறிக்கையில் அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல
அது என் ஆழமான வேட்கை அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன் என் சார்பில் நான் ஏற்கனவே கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு கட்சி
பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்குவேன் என்று நடிகர் விஜய் சொல்லி உள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும் ரசிகன் மத்தியில் பொழுது ஒரு துக்க செய்தியாக இருந்து வருகிறது…
Comments are closed.