என்னது, சூர்யா-ஜோதிகா விவாகரத்து செய்யப் போகிறாரா.? குழந்தைகளுடன் மும்பைக்கு சென்ற ஜோதிகா.?

தமிழ் நவில் தவிர்க்க முடியாத நடிகராக செயல்படுபவர் நடிகர் சூர்யா இவர் நடிகை ஜோதிகாவை 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலை திடீரென்று நடிகை ஜோதிகா தனது மகன் மற்றும் மகளை கூட்டிக்கொண்டு மும்பைக்கு சென்று செட்டில் ஆகி உள்ளார். ஆனால், நடிகர் சூர்யா சென்னையில் தான் இருந்து வருகிறார்.

 

அவ்வப்போது சூர்யா மும்பைக்கு சென்று வரும் புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக தெரிகின்ற பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

மேலும், நடிகர் சூர்யா அவருடைய படத்திற்காக சென்னையில் இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் இவர் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும். இதனால் விவாகரத்துக்கு முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அதனால் தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு மும்பையில் சென்று விட்ட நடிகை ஜோதிகா என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நான் ஹிந்தி படத்தில் பிசியாக நடித்து வருகிறேன். அதனால், மும்பைக்கு வந்து விட்டேன் என்னுடைய பிள்ளைகளும் மும்பையில் சந்தோஷமாக இருக்கிறார்கள்

 

நன்றாக படிக்கிறார்கள். மேலும், நான் மும்பையிலும் என்னுடைய குழந்தைகள் சென்னையில் இருந்தால் படிப்புக்கு சரிப்பட்டு வராது என்ற காரணத்தினால் தான் அவர்களை மும்பைக்கு கூட்டி வந்து விட்டேன் என்று சொல்லி இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.