பிச்சைக்காரன் படமே நான் நடிக்க வேண்டியது.? வாய்ப்பை தவறவிட்ட நடிகர்.. சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜய் ஆண்டனி..!!

இயக்குனர் சசி என்பவர் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் பிச்சைக்காரன். இந்த திரைப்படம் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிகப்படியான லாபத்தை கொடுத்த

 

திரைப்படத்தில் ஒன்றாகும். மேலும், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படத்தில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது. மேலும், இதனுடைய இரண்டாம் பாகம் வெளிவந்தது. ஆனால், முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ஓரளவுக்கு வரவேற்பு தான்

 

பெற்றுள்ளது என்று சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அம்மா பாடல் தான். மேலும், முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த நிலையில்

 

தற்போது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சித்தார்த் என்பவர் தான்.. முதலில் இவரிடம் தான் கதையை கூறி இருந்தார்கள்.

 

அவர் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. அதன் பிறகு தான் இயக்குனர் சசி சிறிய மாற்றத்தை செய்து நடிகை விஜய் ஆண்டனிடம் கதையை கூறியுள்ளார். அவருக்கு பிடித்தவுடன் உடனடியாக படத்தை எடுத்து விட்டார்கள் படம் வெளிவந்த

 

பிறகு தான் இப்படி ஒரு படத்தை தவற விட்டுவிட்டோம் என்று நடிகர் சித்தார்த் படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பிறகு தான் அவரது கூட்டணியில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ளார்…

 

 

 

Comments are closed.