நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியா இது…? இவ்வளவு பெரிய மகன், மகளா..? தீயாய் பரவும் புகைப்படம்…!
நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதா குமாரியை திருமணம் செய்திருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு போனி வர்மா என்ற டான்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். மகளின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்தேன் என்கிறார் பிரகாஷ்ராஜ். இதுப்பற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது : எனக்கு 4 குழந்தைகள். அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது. குழந்தைகளுக்கு வெளி உலகம் நிறைய கற்று கொடுக்கிறது. அவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
குழந்தைகள் பெற்றோர்களை பார்த்து வளர்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு புத்தகம் மாதிரி நாம் இருக்க வேண்டும். நான் மீண்டும் திருமணம் செய்தபோது எனது பெரிய மகளுக்கு 14 வயது. என் அப்பா, தங்கை, மகள் 3 பேரையும் உட்கார வைத்து போனி வர்மாவை அழைத்து வந்து இவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றதும், எனது மகள் சம்மதம் சொன்னாள். ஆனால் எனது அம்மா அழுதுவிட்டார். என் குடும்பத்தில் நிறைய பெண்கள் உள்ளனர். எல்லோருக்கும் மீண்டும் திருமணம் செய்து கொள்வது பற்றி விளக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது.
என் முதல் மனைவி லலிதாவும், இரண்டாவது மனைவி போனியும் குழந்தைகள் விஷயத்தில் தோழிகளாகி விட்டனர். லலிதாவுக்கு நான் மட்டும் தான் விவாகரத்து கொடுத்தேன். எனது குழந்தைகளும் அம்மாவும் விவாகரத்து கொடுக்கவில்லை. லலிதாவுக்கும் எனக்கும் பிரச்சினை இருந்தது. பொய்களுடன் சேர்ந்து வாழக்கூடாது என்று பிரிந்து விட்டோம். நான் நேர்மையாக இருக்கிறேன். லலிதாவும் நானும் வெளிப்படையாக பேசி பிரிந்தோம்.
இதையெல்லாம் பார்த்தே எனது குழந்தைகள் வளர்ந்தனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டாவது மனைவி, மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சூரியன் மறையும் பொழுதில் என் மகனுடன். மேலும் என் மனைவியும் மகளும் செய்த பீட்சாவை மகிழ்வுடன் சாப்பிடுகிறோம். இந்த லாக்டவுனில் மகிழ்வான தருணங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Basking in the sunset with my son.. and relishing pizzas made by my darling wife n daughter in the farm…. quality time in lockdown… make out the best of life .. 🙏stay home . Stay safe pic.twitter.com/Cvz7cd3Dls
— Prakash Raj (@prakashraaj) April 22, 2020
Comments are closed.