க்யூட்டாக போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? தமிழ் சினிமாவில் வாய்ப்பே கிடைக்கவில்லை என்றாலும் போராடும் நடிகர்..!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகர் நகுல் என்பவர். மேலும், இவர் நடிகை தேவயானியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் குண்டாக இருந்து வந்துள்ளார். அதன் பிறகு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் இருந்து இவர் நாயகனாக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டார். அந்த திரிப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி,

 

கந்தகோட்டை, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர் ஆகும் இருந்து வந்துள்ளார். அந்த வகையில் கஜினி, அன்னியன், வேட்டையாடு விளையாடு,

 

காதலில் விழுந்தேன் போன்ற திரைப்படத்தில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது பெரிதாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகின்றார். இருந்தாலும் தனக்கு வரும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு

 

இன்னும் சினிமாவில் முயற்சி செய்து கொண்டு வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகரின் சிறு வயது புகைப்படமும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

Comments are closed.