துரத்தி துரத்தி சுதாகரை காதலித்த நடிகை..!! கடைசி வரை சேராமல் போன ஜோடி.?
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் குட்டி கட்டி பறந்து வந்தவர்கள் தற்பொழுது பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவை விட்டு விலகி இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களால் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகர் சுதாகர் என்பவர்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி திரைப்படத்திலும் கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை தயாரித்து வந்துள்ளார்.
மேலும், இவர் 1977 ஆம் ஆண்டு பாரதிராஜா உடன் தொடங்கி அடுத்தடுத்து மாபெரும் வெற்றி படங்களை அந்த காலகட்டத்தில் கொடுத்து வந்துள்ளார் மேலும் இவர் பதினாறு வயதினிலே திரைப்படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு கிழக்கே போகும் ரயில் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகர் ராதிகா.
இவர் அந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், சுதாகர் மற்றும் ராதிகா இருவரும் சினிமா மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக இருந்து வந்துள்ளார்கள் என்று பலரும் நினைத்து வந்துள்ளார்கள். அந்த சமயத்தில் பல கல்லூரி மாணவிகள் பலரும் இவரை வெறி பிடித்தது போன்ற சுற்றி வந்துள்ளார்கள்.
மேலும், இவர் எப்பொழுதும் தங்கி இருக்கும் ஹோட்டல் அருகில் பெண்கள் நிரம்பிருப்பார்கள் அந்த சமயத்தில் இவருக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் பாரதிராஜாவின் நிறம் மாறாத பூக்கள் என்ற வெற்றி பெற்ற ஒரு படம் அதன் பிறகு அதிகமாக மதுபோதையில் படபிடிப்பு வந்தார்.
அந்த சமயத்தில் கமலுக்கு இணையாக தனக்கென்று அங்கீகாரத்துடன் இராசியில் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.
மேலும், நடிகை ஸ்ரீபிரியா இவரை காதலித்து வந்துள்ளதாக அந்த காலகட்டத்தில் பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது. அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக காதல் பிரிந்து விட்டது என்று கூறப்படுகிறது…
Comments are closed.