இயக்குனருடன் ஏற்பட்ட மோதல்.. பக்காவாக பிளான் போட்டு அஜித்தை தூக்கிய மணிரத்னம்-சுகாசினி..!!

ஆரம்ப காலக்கட்டத்தில் வளர்ந்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளை இந்த படத்திற்கு இவர் செட் ஆவார் ஆக மாட்டார் என்று முன்கூட்டியே படத்தின் படபிடிப்பை ஆரம்பிக்கும் பொழுது தெரிந்து கொண்டு அவளை படத்தில் வைக்கலாமா வேண்டாமா என்று முடிவு எடுத்து தெரிவித்து விடுவார்கள்.

 

அந்த வகையில் நடிகர் அஜித் பத்து நாட்கள் படத்தில் நடித்து அதன் பிறகு தயாரிப்பாளர் கொடுத்த டார்ச்சரால் படத்திலிருந்து தூக்கிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில்

இயக்குனர் மணிரத்னம் மெட்ராஸ் டாக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். முதலில் தன் படத்தை தயாரித்து வந்து மணிரத்தினம் வளர்ந்து வரும் இயக்குனரை வைத்து திரைப்படத்தை தயாரிக்க ஆரம்பித்தார்.

 

அந்த வகையில் கதை கதாபாத்திரம் டப்பிங் உள்ளிட்ட பல விதங்களில் மணிரத்தினம் மனைவி சுகாசமையும் பங்கேற்றுள்ளார். அந்த வகையில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் சூர்யா, விஜய் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நேருக்கு நேர்.

 

இந்த திரைப்படத்தை மணிரத்தினம் தயாரித்துள்ளார். முதலில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் தான் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு இடையில் அஜித்துக்கும் இயக்குனர் வசந்த் இருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

 

இது மணிரத்தினம் மற்றும் சுகாசினி இருவருக்கும் சென்றுள்ளது. உடனடியாக இருவரும் இயக்குனரிடம் அஜித்தை படத்தில் இருந்து தூக்கி விடலாம் என்று பக்காவாக பிளான் போட்டு இவரை வெளியேற்றி உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.

 

அதன் பிறகு அவருடைய கதாபாத்திரத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவாவிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் இருவரும் தனிப்பட்ட காரணத்தால் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் சூர்யாவிடம் கேட்டு இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.