என்னது, நான் ராசி இல்லாத நடிகையா.? விஜய் படத்தால் வந்த நல்ல பெயர்..!!
தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் பல முன்னணி பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்த தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இவருக்கு தற்பொழுது 40 வயது ஆனாலும்
இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருந்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவரே ராசி இல்லாத நடிகை என்று கூட ஒரு சமயத்தில் ஒதுக்கப்பட்ட உள்ளார்கள். மேலும், இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தை தொடர்ந்து சாமி திரைப்படத்தில் நடித்து
மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு இவரு நடிப்பில் வெளிவந்த லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18 போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் ரிலீசாகவில்லை. அதன் பிறகு திரிசாவே ஒப்பந்தம் செய்வதற்கு பல தயாரிப்பாளர்கள் தயங்கி வந்துள்ளார்கள்.
ஆனாலும், விஜய் இவரை நம்பி தனக்கு ஜோடியாக்கி நடிக்க வைத்த திரைப்படம் தான் கில்லி. அந்த திரைப்படம் தாறுமாறு வெற்றியை கொடுத்துள்ளது. அதன் பிறகு விஜய், சூர்யா, அஜித் போன்ற நடிகர்களுடன் இவர் அடுத்தடுத்து பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.
அதன் பிறகு இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாழ்க்கையில் வரத் தொடங்கிவிட்டது. அதன் பிறகு கிட்டத்தட்ட 14 வருடத்திற்கு பிறகு தற்போது நடிகை திரிஷா நடிகர் விஜய் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்…
Comments are closed.