இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?? ஏன் அவர்கள் கனவில் வருகிறார்கள்?
கனவு என்பது பன்மடங்கு ஆற்றல் கொண்டது. நம்முடைய ஆழ்மனது நம்முடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதே கனவு என்பது நம்மில் பலருக்கும் புரிவதில்லை. அவற்றை உற்றுநோக்கினால் சில புரிதல்கள் கிடைக்கும்.இறந்தவர்களை தெய்வமாக வழிபடும் மரபு நம்மிடம் உள்ளது. அதே இறந்தவர்கள் நம்முடைய கனவில் வந்தால் அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இறந்தவர்கள் ஏன் நம்முடைய கனவில் தோன்றுகிறார்கள் என்பது நமக்குப் புரிவதில்லை தான். ஆனால் அந்த ஆன்மாக்கள் சக்தி வாய்ந்தவை.
நீங்கள் விழித்திருக்கும் போது, உங்களுடைய ஐம்புலன்களும் இயங்கிக் கொண்டிருக்கும். அப்போது உங்களால் இதுபோன்ற சக்திகளை உணர முடியாது.அதேபோல், விழித்திருக்கும் போது, நம்முடைய மனம் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும்.
அதனாலேயே இதுபோன்ற சக்திகள் நம்முடைய கனவில் இரவில் நாம் தூங்கும் போது தோன்றுகின்றன.
இறந்தவர்கள் உயிருடன் இருந்தபோது, அவருக்கு செய்ய வேண்டியதை நீங்கள் செய்யவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தாலும் இதுபோன்று கனவுகள் வரும்.
சிலருடைய இறப்பு உங்களுக்கு அதிக பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனாலும் இதுபோன்ற கனவுகள் வருவதுண்டு.இறந்தவர்கள் தங்களுடைய சந்ததியினரிடம் தொடர்பு கொள்ள நினைக்கலாம்.
உங்கள் வழியாக அவர்களுடைய ஆன்மாவுக்கு ஏதாவது உதவியோ அல்லது யாரையாவது பழிவாங்கவோ நினைக்கலாம்.
தங்களுடைய வீட்டில் உள்ள வயது முதிர்ந்தவர்கள் இறந்த பின் கனவில் வந்தால், அவர் உங்கள் சந்ததியைப் பாதுகாக்கத் துடிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு இறந்தவர்கள் கனவில் வருவதற்கு ஆன்மிக ரீதியாக இன்னும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.
Comments are closed.