பா ம்பின் பி த்தப்பையை சாப்பிட்ட ந பருக்கு நேர்ந்த கதி…! ஸ்கேனில் மருத்துவர்கள் கண்ட காட்சி : அதிர்ச்சி தகவல்
சீனாவில் கடந்த பல மாதங்களாக சுவாசப் பிரச்சனையை அனுபவித்து வந்த நபரின், ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தத நிலையில், சில எச்சரிக்கை தகவல்களை தெரிவித்துள்ளனர். உலகில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கட்டுள்ளனர். இதற்கு சீனா தான் காரணம், சீனாவில் இருக்கும் கடல் உணவுகள் விற்பனை செய்யப்படும் சந்தையில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியுள்ளதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் தற்போது கடல் உணவு வகைகளை சாப்பிட்டு வந்த சீனாவை சேர்ந்த நபருக்கு ஒரு வித நோய் ஏற்பட்டுள்ளதால், தற்போது இந்த சந்தேகம் மேலும் வலுக்க ஆரம்பித்துள்ளது.
கிழக்கு சீனாவின், Jiangsu மாகாணத்தின் Suqian நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றிற்கு, Wang என்று அழைக்கப்படும், நபர் பல மாதங்களாக இருக்கும் சுவாசப் பிரச்சனை காரணமாக சென்றுள்ளார். மருத்துவர்கள் அவரின் உணவு பழக்கவழக்கங்களை பற்றி கேட்ட போது, நண்டுகள், நதி நத்தைகள் போன்ற கடல் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.
ஒரு முறை பாம்பை பச்சையாக சாப்பிட்டதுடன், அதன் பித்தப்பையையும் சாப்பிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவரது நுரையீரலில் புழுக்கள் இருந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது paragonimiasis என்ற நுரையீரல் காய்ச்சலால் ஏற்படும் ஒட்டுண்ணி நோய்த்தொற்று எனவும், நாடாப்புழு முட்டைகளைக் கொண்ட கடல் உணவை சாப்பிடுவதாலோ அல்லது அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதாலோ இந்த வகை நோய் முக்கியமாக ஏற்படுவதாக மருத்துவமனையைச் சேர்ந்த சுவாச மருத்துவர் Zhao Haiyan கூறியுள்ளார்.
மேலும், சமைக்காத உணவை சாப்பிடுவதால் அவரது முக்கியமான உறுப்பு பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எந்த ஒரு உணவையும் சமைத்து சாப்பிடும் படி மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த நபரின் சி.டி.ஸ்கேனில் நுரையீரலில் ஏற்படும் தீவிரமான, வரி வடிவ நோய்த்தொற்றுகளை சுட்டிக்காட்டும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
Comments are closed.