ராமராஜன் பீக்கில் இருந்த போது எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா..? ரஜினி, கமலுக்கு இணையாக வாங்கினார…?

ராமராஜன். 1980 தொடங்கிய இவரின் திரையுலக பயணம் 90 களில் அவர் இருந்த உச்சத்தை கண்டு பல முன்னணி நடிகர்களே ராமராஜனின் படம் வெளியாகிறது என்றல் தங்களுடைய படத்தை வெளியிட தயங்கிய காலகட்டம் மிகவும் குறைவான காலங்களே தமிழ்சினிமாவில் உச்சத்தில் இவர் இருந்தாலும் அந்த உச்சத்தை வைத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமலுக்கு அடுத்த இடத்தை பிடித்தவர். முதலில் துணை இயக்குனராக தான் திரையுலக பயணத்தை துவங்கிய இவர் முன்னேறி இணை இயக்குநர், இயக்குநர் உருவாக்கினார், 1986 ஆம் ஆண்டு நம்ம ஊரு நல்ல ஒரு என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

வி.அழகப்பன் என்பவர் இயக்கிய இந்த படம் அந்த கால கட்டத்தில் நல்ல வரவேற்பை பெற உடனே தன்னுடைய நடிப்பு பணியையும் துரிதமாக துவங்கினர், நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட், எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் போன்ற திரைப்படங்கள் ராமராஜமனை வெகுஜன மக்களின் கலைஞனாக உருமாற்றியது, உண்மையா சொன்னால் இவர் தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கிய முதல் நடிகர், என்ற காலகட்டங்களில் ரஜினி, கமல் கூட லட்சங்களில் தான் சம்பளம் பெற்றார்கள், இந்த செய்தி அன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு ஆச்சர்யமாகவும் சிலருக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது.

அதின் பின் மெல்ல மெல்ல சரியத்துவங்கிய ராமராஜனின் திரையுலக பயணத்தால் அவர் தமிழக அரசியலில் கவனம் செலுத்தி பல பதவிகளையும் வகித்தார். இன்றும் ராமராஜன் என்றால் டவுசரும், செண்பகமே செண்பகமே பாடலும் தான். ராமராஜனுக்கு அடுத்ததாக கோடிகளில் சம்பளம் வாங்கியவர் நடிகர் ராஜ்கிரண்… கிரஸண்ட் பிக்ச்சர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் சாதாரண வேலையில் இணைந்து தன்னுடைய திறமையால் நல்ல இடத்திற்கு வந்த சமயத்தில் அந்த நிறுவனத்தை சில காரணங்களால் மூட நேரிடவே, தன்னுடைய விசுவாசத்திற்க்காகவும், அவ்வளவு நாள் உழைத்தமைக்காகவும் தன்னுடைய முதலாளியால் கொடுக்கப்பட்ட 6,500 ரூபாயை முதலீடாக கொண்டு திரைப்பட விநியோகிஸ்தராக தன் வாழ்க்கையை துவங்கியவர்.

பின்பு படிப்படியாக முன்னேறி 1991 ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவின் அறிமுக இயக்க படமான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலே மக்களின் அமோக வரவேற்பை பெற்ற ராஜ்கிரண் நடித்த அணைத்து திரைப்படங்களுமே ஹிட். இவர் திரைத்துறைக்கு வந்து 27 ஆண்டுகள் ஆனாலும் கூட இதுவரை 28 திரைப்படங்கள் மட்டுமே நடித்துள்ளார்.

இவர் 1996 நடித்த மாணிக்கம் என்ற திரைப்படத்திற்க்காக கோடிகளில் சம்பளம் வாங்கினார் என்றும் கூறப்படுகிறது, ராமராஜனுக்கு பின்பாக ராஜ்கிரண் தான் கோடிகளில் சம்பளம் வாங்கிய தமிழ் திரைப்பட நடிகர்.
தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த பா.பாண்டி திரைப்படம் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகனும் நடிகருமான தனுஷ் அறிமுக இயக்கத்தில் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Comments are closed.