சின்ன வீட்ல தான் இருந்தேன் !! என் மனைவியை இன்னும் லவ் பண்றேன் !! காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் உ ருக்கம்.!
90 களில் தன்னுடைய எதார்த்த நடிப்பால் நம் அனைவரின் மனதில் இடம் பிடித்த ஒரு காமெடி நடிகர் தான் நடிகர் சின்னி ஜெயந்த். அன்று முதல் இன்றுவரை பல வித தோற்றத்தில் தோன்றி நம்மளை மகிழ்வித்துள்ளார் நடிகர் சின்னி ஜெயந்த்.. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை மியூசிக் அகாடமிக்குப் பின்னாலிருந்த புதுப்பேட்டை தோட்டத்தெரு. என் அப்பா கிடைச்ச சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்தார். என்கூடப் பிறந்தவங்க ஆறு பேர். நான்தான் கடைக்குட்டி. எங்க வீடு ரொம்ப சின்னதாதான் இருக்கும். மிடில் கிளாஸ் ஃபேமிலி நாங்க. என் மாமா எங்க வீட்டுக்கு மாடியில் இருந்தார்.
மியூசிக் அகாடமியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். எங்க அம்மாவுக்கும் கர்நாடக மியூசிக் நல்லாத் தெரியும்!” – ‘அப்போ இப்போ’ கதையை உற்சாகமாகச் சொல்ல ஆரம்பிக்கிறார், நடிகர் சின்னி ஜெயந்த்.நாங்க தெலுங்கு பேசுவோம். அதனால என்னை சின்னினு கூப்பிடுவாங்க. ஆனா, என் பெயர் சின்ன நாராயண சாமி. சினிமாவில் நடிகன் ஆனதுக்குப் பிறகு என் பெயரை சின்னி ஜெயந்த்னு இயக்குநர் ஜே.மகேந்திரன் சார் மாத்தி வெச்சார். ‘கிழக்கு வாசல்’ படம் பண்ணப்போ நான் கல்யாணம் பண்னேன்.
அரேஞ்ச் மேரேஜ். ஆனா, இப்பவும் நிறைய லவ் பண்ணிக்கிட்டு இருக்கோம். ரெண்டு பசங்க இருக்காங்க. காலேஜ் படிக்கிறாங்க. பெரியவன் பி.ஹெச்.டி பண்றான். சின்னவன் டெலாயிட் கம்பெனியில் வேலை பார்க்கிறான். பசங்களை ஏன் இவ்வளவு பெரிய படிப்பு படிக்க வைக்குறீங்கனு பல பேர் கேட்டாங்க.
சினிமாவில் எப்போ வேணாலும் நடிக்கலாம், படிப்பு அப்படியில்லை என் மனைவி ஸ்கூல் வெச்சிருக்காங்க அதை தவிர, ஈவென்ட் மேனேஜ்மென்ட்டும் நடத்திக்கிட்டு இருக்காங்க. நானும் அவங்ககூட சேர்ந்து அந்த வேலைகளைப் பார்த்துக்கிறேன்.
என்னைவிட என் மனைவி ரொம்ப பிஸி. தவிர, கோயம்புத்தூர் பக்கத்தில் அம்மா ஊரில் நான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்போ, அடுத்தடுத்து ரெண்டு படங்களை டைரக்ஷன் பண்ணலாம்னு இருக்கேன். விரைவில் அதுக்கான அறிவிப்புகள் வரும்!” நம்பிக்கையுடன் முடிக்கிறார், சின்னி ஜெயந்த்.
Comments are closed.