காலை வெட்டி எடுக்கணும்னு சொல்லிட்டாங்க..!! 23 ஆபரேஷன்.. விக்ரமின் எமோஷனல் ஸ்பீச்..!!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னோடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது அடுத்தபடியாக திரையரங்கில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான்.

 

இந்த திரைப்படம் வருகின்ற 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவித்த நிலையில் நேற்று படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பட குழுவினர் பலரும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்கள்.

 

அந்த வகையில் விக்ரம் நான் எட்டாவது படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதன் பிறகு கல்லூரி படிக்கும் பொழுது.. இந்த ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. அப்பொழுது பிளாக் காமெடி என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தேன்.

 

அதற்காக எனக்கு சிறந்த நடிகர் என்று கொடுத்தார்கள். ஆனால், அன்றைய தினமும் விபத்தில் காலை முறித்துக் கொண்டேன்.. மேலும், என் காலை வெட்டி எடுக்க வேண்டும் என்று கூறினார்கள் 23 ஆபரேஷன் செய்தார்கள். அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக

 

நடக்க ஆரம்பித்தேன் மருத்துவர்கள் என்னால் நடக்கவே முடியாது என்று சொன்னார்கள். ஆனால், நான் எனது அம்மாவிடம் நான் கட்டாயம் நடப்பேன் என கூறினேன் பத்தாண்டுகள் எனது வாழ்க்கை பின்னால் சென்றது

 

வீட்டிலும் வறுமையில் இருந்தார்கள் மாதம் 750 ரூபாய் சம்பளத்திற்கு போனேன்.. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பித்தேன் எனது அம்மா வேலைக்கு போக வேண்டாம் என கூறினார்

 

நான் நடிக்க வேண்டும் என கூறிக் கொண்டே இருப்பேன். மேலும், ஒரு கனவை நோக்கி நமது சிந்தனை இருந்தால் நம்மால் நிச்சயம் அதை அடைய முடியும் என்று நான் நிரூபித்து காட்டினேன் என்று பல சுவாரசியமான தகவல்களை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.