கவுண்டமணியின் மகளை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக புகைப்படம் வெளிவந்தது..!!

நகைச்சுவையில் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் கவுண்டமணி என்பவர். இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதற்கு முன்பாக சின்ன சின்ன கதாபாத்திரத்தில் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்திருந்தாலும் இந்த திரைப்படம் தான் அவருக்கு ஒரு நடிகராக அறிமுகம் கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் இவர் தனது வாய்ப்பை பெற்று

 

தனது நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். மேலும், இவருடன் இணைந்து செந்திலும் இவரும் சேர்ந்து செய்யும் நகைச்சுவை மக்கள் மத்தியில் இன்றும் மறக்க முடியாத நகைச்சுவையாக இருந்து வருகிறது.

 

மேலும், நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் வில்லனாகவும் ஒரு சில திரைப்படத்தில் கவுண்டமணி மிரட்டி இருப்பார். மேலும், இவர் 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

 

இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கிறார். அந்த வகையில் சுமித்ரா என்ற ஒரு மகளும் செல்வி என்ற ஒரு மகளும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் கவுண்டமணியின் மகள் சுமித்ராவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

அவர் சில ஆண்டுகளாகவே பொது சேவை செய்து வருகிறார். மேலும், புற்றுநோயா பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் தவறாமல் தனது கணவருடன் இணைந்து சேவை செய்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.