எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.? ஒரே வாரத்தில் இறந்த கணவர் குறித்து பேசிய நடிகை..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நாதஸ்வரம் என்ற தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் தான் சுருதி சண்முகப்பிரியா என்பவர். அந்த நாடகம் கிட்டத்தட்ட 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்தது.

 

இந்த தொடரில் மூலம் அவருக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பு கிடைத்து அடுத்தபடியாக வாணி ராணி, கல்யாண பரிசு, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இவருக்கு அரவிந்த் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் அவருடைய கணவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார்.

 

மேலும், பல மாதங்களுக்குப் பிறகு நடிகை சுருதி சண்முகப்பிரியா பேட்டியண்டில் கலந்து கொண்ட பொழுது அரவிந்த் மரணத்தை பற்றி பேசியுள்ளார். அவருடைய மரணத்தை ஆராய்ச்சி செய்கிறார்கள்.? ஏன் மரணத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.?

 

இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.? இறுதி சடங்குகள் முடிந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. ஒரு நாள் இரவு அரவிந்தின் புகைப்படத்தை பார்த்து எனக்கு மட்டும் வாழ்க்கையில் இப்படி எல்லாம் ஏன் நடக்கிறது என்று நினைத்து வருந்தினேன்…

 

 

 

 

 

 

 

Comments are closed.