என்னது, யுகேந்திரனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.? பெரியளவு பிரபலமாகாததற்கு இதுவும் ஒரு காரணம்.?
சினிமாவில் ஏராளமான வாரிசு பிரபலங்கள் உருவாகி வருகின்றார்கள். அந்த வகையில் மலேசியா வாசுதேவனின் மகனும் ஒருவர் மலேசியா வாசுதேவன் என்பவர். பிரபல சிறந்த பாடகரும் நடிகரும் ஆவார். இவர் முதன்முதலாக 16 வயதினிலே என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடலை பாடி அறிமுகமானார்.
இவர் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை சினிமாவில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அவரது மகனும் ஒரு நடிகராகவும் பாடகராகவும் வளர்ந்து கொண்டிருக்கின்றார். அவர்தான் யுகேந்திரன் வாசுதேவன் என்பவர்.
இவர் பாண்டவர் பூமி என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற சம்பா சம்பா என்ற பாடல் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வரிசையாக தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்து வந்துள்ளது. அதன் பிறகு ஒரு சமயத்தில் இவர் நடிகராகவும் நடித்துள்ளார்.
இவர் தற்பொழுது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு தனது சிறப்பாக விளையாடிகொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையே சூர்யா நடிப்பில் வெளிவந்த காக்க காக்க படத்தில் என்னை கொஞ்சம் மாற்றி பாடல்
விஷால் நடித்த செல்லமே படத்தின் ஒரு பாடல் பாட வேண்டியது இருந்தது. அதன் பிறகு என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டை இருந்து சரவணன் என்ற படத்தில் ஒரு பாடலை பாடினேன்.
அதன் பிறகு மாற்றிவிட்டார்கள் வேறொருவரை வைத்து பாட வைத்தார்கள். இப்படி ஏராளமான திரைப்படத்தில் நான் பாடி அதன் பிறகு என்னை வேண்டாம் என்று நிராகரித்து இருக்கின்றார்கள். இதனால் தான் நான் பெரிய அளவு பிரபலம் ஆக முடியவில்லை என்று கண்ணீருடன் யுகேந்திரன் தெரிவித்துள்ளார்…
Comments are closed.