தீப்பெட்டி கணேசனை நேரில் சந்திக்க வீட்டிற்கே சென்ற பிக் பாஸ் சினேகன், என்ன செய்துள்ளார் தெரியுமா? வீடியோவுடன்

ரேணிகுண்டா படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகர் தீப்பெட்டி கணேசன், இவர் நடிகர் அஜித்துடன் பில்லா 2 திரைப்படத்திலும் நடித்திருந்தார்.சமீபத்தில் இவர் சினிஉலகத்திற்கு அளித்திருந்த பேட்டியில் தான் இப்பொது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், தனது குடும்பத்திற்கு உதவி தேவை படுவதாகவும் மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.மேலும் தனது குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர்கள் அஜித் அல்லது ராகவா லாரன்ஸ் உதவ வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். நடிகர் அஜித் இதை கண்டால் நிச்சயம் உதவுவார் எனவும் கூறியிருந்தார்.

இதையடுத்து தற்போது பாடலாசிரியர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான சினேகன் அவரின் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து, 2 வாரங்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் உணவு பொருள்களை அளித்துள்ளார்.

மேலும் தீப்பெட்டி கனேசனின் குழந்தைகளின் இந்த வருடத்திற்கான படிப்பு செலவை சினேகன் செயலகம் அறக்கட்டளை சார்பாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதுபோன்று கஷ்டப்படும் கலைஞர்களுக்கு உதவ பலரும் முன் வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments are closed.