கனடாவில் படிக்கும் நடிகர் விஜயின் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் தகவல்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் விரைவில் திரைக்கு வர உள்ள உப்பெனா படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.தமிழில் இத்திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கில் உப்பெனா படத்தை இயக்கிய புச்சி பாபு தமிழிலும் ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தையும் இயக்க உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படித்து வரும் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார். இந்நிலையில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

 

Comments are closed.