விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியை பார்த்துள்ளீர்களா.? திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வரத் தொடங்கி இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால் என்பவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

 

அந்த படத்தை தொடர்ந்து பலே பாண்டி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம், எஃப் ஐ ஆர், கட்டாகுத்தி போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தற்பொழுது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடித்த வருகின்றார். அந்த படத்தை தொடர்ந்து மோகன்தாஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

மேலும், அந்த திரைப்படத்தை தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இவர் தயாரித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 2010 ஆம் ஆண்டு ரஞ்சனி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு 2021 ஆம் ஆண்டு ஜுவாலா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் அவரது திருமண புகைப்படத்தை நடிகர் விஷ்ணு விஷால் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் ரசிகர் மத்தியில் தீயாய் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.