நீ ஒன்னும் நடிக்கவே வேண்டாம் கிளம்பு..!! வடிவேலுவை விரட்டி விட்ட பாரதிராஜா..!! என்னதான் நடந்தது.?

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் தான் வடிவேலு. இவர் பல நகைச்சுவை வேடத்தில் நடித்து மக்களை சிரிக்க வைத்து வருகின்றார். இப்படி ஒரு நிலையில் இவர் கிழக்கு சீமையிலேயே படத்தில் நடித்த அதிக சம்பளம் கேட்டதாக

 

வடிவேலுவின் பாதிராஜா விரட்டி விட்ட சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது தான் கிழக்கு சீமையிலே. இந்தப் படத்தை தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தானு தயாரித்துள்ளார்.

 

மேலும், இந்த படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. அதன் காரணமாக வடிவேலும் தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி கேட்கலாம் என்று நினைத்து 25 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். இதனால், கோபம் அடைந்த இயக்குனர் பாரதிராஜா நீ நடிக்கவே வேண்டாம்

 

கிளம்பு என்று விரட்டி விட்டார். அவரும் கண்ணீருடன் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பிறகு படத்தின் தயாரிப்பாளர் அவரை அழைத்து என்னப்பா ஆச்சு என்று கேட்டுள்ளார். அதற்கு அவரும் நடந்தது எல்லாம் கூறியுள்ளார். நீ சம்பளம் வேண்டும் என்றால்

 

என்னிடம் வந்து கேட்க வேண்டியதுதானே என்று அவரை சமாதானப்படுத்தி அவர் கேட்ட சம்பளத்தையும் அவர் கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.