கமலால் வந்த பிரச்சனையை சமாளிக்க சங்கர் எடுத்த அதிரடி முடிவு..!! மூணு இயக்குனர்களை களம் இறக்கும் சங்கர்..!!

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர். இவரது இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன். இந்த திரைப்படம் முதல் பாகம் வெளிவந்து மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக்கி வருகின்றார்கள்.

 

தற்பொழுது திரைப்படத்திற்கான பிரமாண்டமாக செட் சென்னையில் அமைத்து வருகின்றார்கள். மேலும், இவர் தெலுங்கு நடிகர் ராம்சரண் திரைப்படத்தை இயக்கி வருவதால் இரண்டு திரைப்படத்திலும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.

 

மேலும், கமல் மாதம் 10 நாட்கள் மட்டுமே இந்தியன் படம் என்பதற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார். அதன் காரணமாக சங்கரும் இதற்கான ஒரு முடிவை ஒன்று எடுத்துள்ளார். அது என்னவென்றால் இந்தியன் படப்பிடிப்பதற்காக

 

முக்கியமான மூன்று இயக்குனர்களை சங்கர் களம் இறக்கி உள்ளார். அந்த வகையில் சிம்பு தேவன். அறிவழகன். வசந்தபாலன் போன்ற இயக்குனர்களை சங்கர் தனது திரைப்படத்தில் இயக்க முடிவெடுத்துள்ளார்.

 

மேலும், கமல் கொடுத்த அந்த 10 நாட்கள் மட்டும் சங்கர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார். மீதி உள்ள நாட்களில் இந்த மூன்று இயக்குனர்களை வைத்து திரைப்படத்தை எடுக்க இயக்குனர் சங்கர் திட்டமிட்டு உள்ளார்…

 

Comments are closed.