சிக்கன் கடை சுவரொட்டியை நக்கிய சிறுவன்… கடைசியில் நடந்த சுவாரஸ்யம்..! நீங்களே வீடியோவ யாருங்க!!

குழந்தைகள் எதை செய்தாலும் சுவாரஸ்யம் தான். அழுகையோ, சிரிப்போ குழந்தைகளின் சின்ன, சின்ன அசைவுகளையும் அனைவரும் ரசிப்பது வழக்கம். அந்தவகையில் ஒரு சிறுவன் சிக்கன் கடை பேனரை நக்கியது அவனுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சீனாவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சிறுவன் காலை 5.45 மணிக்கே தன் குடும்பத்துடன் சிக்கன் பைரைட் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால் அந்த கடை வழக்கமாகவே ஆறு மணிக்குத்தான் திறக்கும். இதனால் பூட்டியிருக்கும் அந்த கடையின் சுவற்றில் சாய்த்திருந்த பேனரில் இருந்த சிக்கனை அந்த சிறுவன் சாப்பிடுவதுபோல் செய்தான்.

சிக்கன் பிரியரான அந்த மூன்றுவயது குழந்தையை அவனது தாய் வீடியோவாக எடுத்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவேற்ற அதுவைரல் ஆனது. இதைத்தொடர்ந்து அந்த சிறுவனுக்கு சம்பந்தப்பட்ட கடையின் ஊழியர்களே நேரில் போய், ஒரு பக்கெட் சிக்கன்களைக் கொடுத்தார்கள்.

அதுவும் போஸ்டரில் சாப்பிட்டுவிட்டு நிஜமாகவே சாப்பிட்டதுபோல் அந்த சிறுவன் கொடுத்த ரியாக்சன் செம வைரலாகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்..

Comments are closed.