காசி படத்தில் நடித்த காவேரி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா இவரின கணவர் ரஜனி படத்தில் நடித்த இந்த குழந்தை நட்சத்திரமா!!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே அறிமுகம் ஆகி தொடர்ந்து ஹீரோயி ஆக ஜொலித்தவர் நடிகை காவேரி கல்யாணி. இவர் நடித்துள்ள படங்கள் உயரிய விருது களான நந்தி விருது, தேசிய விருது, கன்னட சினிமா விருது பெற்றவர். தமிழில் அப்பு, பெண்ணின் மனதை தொட்டு, சமுத்திரம், காசி, புன்னகை பூவே, 2005 ல் கண்ணாடி பூக்கள், 2010 ல் குட் டி பி சா -சு என படங்களில் நடித்தவர் 8 வருடங்கள் கழித்து கடைசி ஆக 2018 ல் கருப்பன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார்.

தெலுங்கு, கன்னடம் படங்களில் நடித்து வரும் அவர் தியாகம் என்ற தமிழ் சீரியலிலும் நடித்திருந்தார். அந்த சீரியலும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது அதன் பின்னர் நடிகை காவேரி படிக்காதவன் படத்தில் சிறு வயது ரஜனியாக நடித்த மலையாள இயக்குனர் சூர்யா கிரண் கல்யாண் என்பவரை திருமணம் செய்துகொண்டு பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் காரணமாக 2016ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார்

தற்போது காவேரி கல்யாணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். கே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.
இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

Comments are closed.