“ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் உடனே போய் விடுவேன் ஆனால் கமல் சாரோடு வாய்ப்பு வந்தால்…?” அஜித் அளித்த பிரத்யேக பேட்டி..!!

தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரி ஈஸ்வர மூர்த்தி என்னும் கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி வருகிறார். தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய H.வினோத் இந்த படத்தை இயக்கி வருகிறார். பிரபல இந்திப் பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் அஜித் பல பேட்டிகளில் தான் ஒரு ரஜினியின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். அந்த வகையில் 1998 காலகட்டத்தில் அவர் அளித்த பேட்டியில் “சீனியர் நடிகர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க யோசிக்க தான் செய்வேன். ஆனால் ரஜினி சார் கூப்பிட்டால் கண்டிப்பா போயடுவேன்.

ரஜினி சார் மாதிரி நான் வெளிப்படையா பேசுபவன். என்னை நம்புபவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் , கமல் சாருடன் நடிப்பேன் ஆனால் அவர் டாமினேஷன் இல்லையென்றால் நான் நிச்சயமாக நடிப்பேன்” என்று கூறி இருக்கிறார். அஜித் இப்படி கூறி இருப்பது, அஜித் ரசிகர்களையும் ரஜினி ரசிகர்களையும் மகிழ்ச்சி ஆக்கி உள்ளது.

 

Comments are closed.