ஜோதிகா சொன்னதை கேட்டு ஆசிரியை செய்த அ திர்ச்சி செயல் – திருப்பதிக்கு வைத்திருந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா?…

ஜோதிகா தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகை. இவர் நடிப்பில் குஷி, தூள், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. நல்ல பீக்கில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்துக்கொண்டார். அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் ஜோதிகா நாம் கோவில்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோமோ, அதை கொஞ்சம் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்வோம் என்றார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது, சிலர் இதை எதிர்க்க, பலர் இதற்கு ஆதரவு தந்தனர். இந்நிலையில் பள்ளி ஆசிரியை ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல், ஜோதிகாவின் பேச்சை பிரதிபலிக்கும் விதமாக உள்ளதாக கருத்துக்கள் பரவிவருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்களை பராமரிக்கும் அளவிற்கு பள்ளி மற்றும் மருத்துவமனைகளை பராமரிப்பது அவசியம். உண்டியலில் காசு போடுகிறீர்கள் அதே போல் மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் கட்டிடம் கட்ட நிதி உதவி செய்யுங்கள் என்று தெரிவித்தார். இந்த பிரச்சனை சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியது.

ஜோதிகாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் குவிய ஆரம்பித்தன. கோவில்களை பற்றி தவறாக பேசிய ஜோதிகா இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையிலும் ஜோதிகா சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அறிஞர்கள், ஆன்மிகப், பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

தனது ஊரட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மழலையர் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் தலா 1000 ரூபாயை வழங்கியுள்ளார். இந்த ஆசிரியர் தம்பதியின் நெகிழ்ச்சியான செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Comments are closed.