நடிகர் அஜித் பிறந்த நாளில் டிடி கொடுத்த சர்ப்ரைஸ்! இன்ப அ திர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்… தீயாய் பரவும் காட்சி

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் அந்த டிவியில் ஒளிபரப்பான அதிகப்படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவை அனைத்தும் வெற்றி அடைந்தது. அதில் முக்கியமானவை ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித்த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் கூட என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இந்நிலையில் இவரது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ஆனால் திருமணமான சில ஆண்டிற்குள் இருவரும் விவா கரத்து செய்துள்ளனர்.

இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் எண்ட்ரீ கொடுத்துவிட்டார், பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு காலில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.இதை இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுருந்தார்

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை ரசிகர்கள் இன்று கொண்டாட காத்திருக்கும் நிலையில் திவ்யதர்ஷினி அஜித்திற்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார்.டுவிட்டரில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தல அஜித்துக்கு இப்படி ஒரு ரசிகையா என்று வியந்து வருகின்றனர்.இதேவேளை, அஜித் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை ஃபேஸ் புக், டுவிட்டரில் கொண்டாட தயாராகிவருகின்றனர்.

 

Comments are closed.