ரசிகர்களுக்காக ஒருநாள் மருத்துவர் ஆனார் காப்பான் பட நடிகை ராகுல் ப்ரீத்தி அப்படி என்ன செய்தார் தெரியுமா

சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் தங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறோம்.அதில் நடிகை ரகுல்ப்ரீத் சிங் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர் அருந்தும் ஒரு பானம் குறித்து பகிர்ந்து கொண்டார்.ரகுல் ப்ரீத் சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானத்தை கையில் ஏந்தியவாறு ஒரு போட்டோவைப் போட்டு, அத்துடன் அந்த ரெசிபியை அவருக்கு சொல்லிக் கொடுத்த ஊட்டச்சத்து நிபுணரும், நீரிழிவு கல்வியாளருமான ராஷிசௌத்ரிக்கு நன்றியைத் தெரிவித்து அந்த ரெசிபியின் செய்முறையையும் குறிப்பிட்டிருந்தார்.
அவற்றை எப்படி தயாரிப்பது என்பது அறிந்து கொள்ளுவோம்.

பானம் தயாரிக்கத் தேவையான பொருட்கள்மஞ்சள் தூள் இஞ்சிமிளகு பட்டை கிராம்பு தேன் தண்ணீர் – 500 மிலிசெய்முறைமுதலில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி, அடுப்பில் வைக்க வேண்டும்.
நீர் சற்று சூடானதும், அதில் தேனைத் தவிர அனைத்துப் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.

நீரானது பாதியாக குறைந்ததும், அடுப்பை அணைத்து விட்டு, பானத்தைக் குளிர வைக்க வேண்டும்.பின் அதை வடிகட்டி, அதில் சுவைக்குத் தேவையான தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பானத்தை தினமும் ஒரு கப் குடிக்க வேண்டும்.

Comments are closed.