தம் !! தண்ணி !! ஹூக்கா !! இன்னும் உடற்கட்டு, குழையாமல் இருப்பது எப்படி? செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி சொல்லும் சீக்ரெட் !!

இன்பாக்ஸ்ல எல்லாரும் ஃபிட்நெஸ் டிப்ஸ் கேக்றீங்க… நான் என்ன பண்றனோ அதை சொல்றன். முடிஞ்சா ட்ரை பண்ணி பாருங்க.
டெய்லி காலைல 2 மணி நேர ஜிம்
சாக்லேட் ,ஐஸ் க்ரீம் , கேக், சாட் ஐட்டெம்ஸ், ஸ்வீட்ஸ் , நொறுக்குதீனீ, பேக்கரி திண்பண்டங்கள், ஆய்லி ஃபுட்ஸ் , கூல் ட்ரிங்க்ஸ் எதையுமே சாப்பிடும் பழக்கம் எனக்கு சின்ன வயசுல இருந்தே கிடையாது. ( என் வீட்ல ஸ்னாக்ஸ் வாங்குற பழக்கமே எனக்கு கிடையாது. வீட்டுக்கு கெஸ்ட் வந்தா குடுக்க மட்டுமே எதாது வாங்கி வைப்பேன்.. அவங்க சாப்பிடும்போதும் நான் எடுத்துக்க மாட்டன்.

அதிகபட்சமா பிரியாணி ஆசை ரெண்டு மூணு மாசத்துக்கு ஒருமுறை வரும்.அப்போது பிரியாணி சாப்பிட்டா அந்த வாரம் ஃபுல்லா ஃபுரூட்ஸ் டயட் போயிடுவன். இல்லனா என் மாஸ்டர் எக்ஸ்ட்ரா வொர்க் அவுட் குடுப்பார்.தம் ,தண்ணி , ஹூக்கா தொட்டது இல்ல . ( ஒருமுறை கூட )சக்கரை பயன்படுத்தவே மாட்டேன்.

நான் எப்பவுமே சாப்பிடும் ஸ்நாக்ஸ் கடலை மிட்டாய், பிஸ்கட், கோதுமை மாவுல நானே செய்யும் கச்சாயம்..இது மட்டும்தான்.
முக்கியமாக என் பக்கத்துல உக்காந்து யாரு என்ன வகையான உணவு வெட்டு வெட்டுனு வெட்னாலும் நான் ஒரு வாய் கூட டேஸ்ட் பண்ண மாட்டன். டெம்ட் ஆகமாட்டன்.. ( என் பக்கத்துல என்ன சாப்ட்டாலும் ,நான் எவ்ளோ பசில இருந்தாலும் டெம்ட் ஆகவே மாட்டன் )

ஓசி ,ட்ரீட்னு எவ்ளோ கிடைச்சாலும் எதையுமே கண்டிப்பா சாப்டமாட்டன் .அதில் எது ஹெல்த்தியோ அத மட்டு்தான் சாப்பிடுவேன்.ரொம்ப முக்கியமானது. உங்கள் இலக்கினை அடைய மைண்ட் கண்ட்ரோல் வேணும் .இது இருந்தா மேல சொன்ன எல்லாமே ஜஸ்ட் லைக் தட்❤

 

Comments are closed.