உயரத்தில் அப்பாவையும் மிஞ்சிய குள்ள நடிகரின் அழகிய மகள்! எப்படி இருக்கிறார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

பிரபல மலையாள நடிகர் பக்ரு. இவர் தமிழில், ஜீவா நடித்த டிஷ்யூம், விஜய் நடித்த காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு, விநயன் இயக்கிய அற்புதத் தீவு உட்பட சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.2 அடி 6 இஞ்ச் உயரம் கொண்ட பக்ரு, முழுநீளப் படத்தில் நடித்த மிகக் குள்ளமான நடிகர் என்ற சாதனைக்காக கின்னஸில் இடம் பிடித்தவர். மலையாளத்தில் ‘குட்டியும் கோலும்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் உள்ளார்.

பக்ரு, ’இளையராஜா’ என்ற மலையாளப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துவருகிறார். மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு படப்பிடிப்பு அரங்கத்துக்கு மகளை வரவழைத்த பக்ரு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவரின் அழகிய மகளின் புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் இன்ப அ திர்ச்சியடைந்துள்ளனர்.
இதேவேளை, இறுதியாக விஜயின் காவலன் படம் இவருக்கு பாரிய வெற்றியை கொடுத்திருந்தது. இந்நிலையில் வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறிய அவரின் மகளின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

Comments are closed.