ஈரோடு To க ள்ளக்குறிச்சி..!! கால்கள் இல்லாத தாயை தோளில் சுமந்து வந்த மகன் !! நெஞ்சை உருக்கும் சம்பவம் !!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலார் என்ற கிராமத்திற்கு மஞ்சள் அறுவடைக்காக சென்ற விவசாய குழு அங்கேயே தங்கியிருந்தனர். தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் வேலையில்லாமல் அந்த கிராமத்திலேயே அவர்கள் இருந்து வந்தனர்.
இதனால் அவர்களின் அன்றாட உண விற்கே மிகவும் சிரமப்பட்டு வந்த 15 பேர் கொண்ட இந்த விவசாய குழு வேறு வழி இல்லாமல் தங்களின் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவெடுத்தார்கள். இந்த விவசாய குழுவுக்கு சமையல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி பெண்மணியை அவரது மகனே தூக்கி செல்ல முடிவெடுத்தார்.

இதனால் மாற் றுத்திறனாளியான தனது தாயாரை அவரது 18 வயது மகனே தனது தோளில் சுமந்து சுமார் 230 கிலோ மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்டார். பரமத்திவேலூரில் உள்ள கொத்தனூர் வாய்க்கால் அருகே உள்ள பகுதியில் 15 பேர் கொண்ட விவசாய குழு செல்வதை அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதிகாரிகள் நடத்திய விசா ரணையில் அவர்கள் க ள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூலித் தொழிலுக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன் சென்றதும் தெரியவந்தது.

இதனை அறிந்த அதிகாரிகள் அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி அவர்களது சொந்த ஊருக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளியான தனது தாயாரை 18 வயது மகனே தோளில் சுமந்து சென்ற சம்பவம் மனதை உருக வைத்துள்ளது.

 

Comments are closed.