என்னுடைய வாழ்நாள் கனவே விஜய் அண்ணாவுக்கு வில்லனாக நடிப்பது தான்.? பிரபல நடிகரின் நீண்ட நாள் ஆசை..!!

தமிழ் திரையரங்கில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையை தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக தன்னுடைய 69 வது திரைப்படத்தில் நடித்து அதன் பிறகு முழுவதுமாக சினிமாவில் இருந்து விலகி

 

அரசியலில் ஈடுபட போகிறதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நடிகர் விஜயை தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான முன்னணி தயாரிப்பு நிறுவனம் பல கோடி ரூபாய் செலவு செய்து அவருடைய திரைப்படத்தை எடுத்து விட வேண்டும் என்று

 

போராடி வருகிறார்கள். கிட்டத்தட்ட தற்பொழுது வரை 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜயின் தம்பியும் பிரபல நடிகருமான விக்ராந்த் நடிப்பில்

 

நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் லால் சலாம். இந்த படத்தின் வரவேற்பு தற்போது நல்லபடியாக இருந்து வரும் நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் நான் விஜய் அண்ணாவுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.

 

அதுவும் அவருடைய கடைசி படமான 69 ஆவது திரைப்படத்தில் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லை என்றால் இனி என் வாழ்நாளில் அந்த ஆசை மட்டும் நிறைவேறாமல் போய்விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.