சூர்யா படங்களுக்கு ரெட்கார்ட், இனி சூர்யா படங்கள் தியேட்டருக்கே வராதா..? சற்றுமுன் வெளிவந்த ஷாக் தகவல்..!! வருத்தத்தில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் சூர்யா, இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான கதைகளாகவே இருக்கும். தற்போது இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இம்மாதம் வெளியாகவிருந்த இப்படம் கொரோன காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  அதன்பின் நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் 6 வது முறையாக அருவா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்திலும் நடிக்கவிருக்கும் சூர்யா, அப்படத்தின் பெயர் வாடிவாசல் என அறிவிக்கப்பட்டது. தற்போது 2டி தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஆன் லைனில் ரிலிஸ் செய்யவுள்ளார்களாம்.

இந்த நிலையில் திரையரங்குகளில் திரையிடாமால் நேரடியாக ஒடிடியில் திரையிட முடிவெடுத்த சூர்யா நிறுவனங்களுக்கும், அவர் சார்ந்த நிறுவனங்களுக்கும் ரெட் கார்ட் விதிக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனவே சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ திரைப்படமும் திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இதை அறிந்த தியேட்டர் நிர்வாகம் இனி 2டி தயாரிப்பில் எந்த படம் வந்தாலும் அதில் திரையரங்கில் ரிலிஸ் செய்ய முடியாது என அறிவித்துள்ளனர். இதனால் சூரரைப் போற்று படத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Comments are closed.