பிரபல பாடகரை ரகசியமாக திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா பால்..!! அட மாப்பிள்ளை இவரா..? வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் மற்றும் அமலா பால் ஆகியோர் நடிப்பில் தலைவா படம் வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குனர் விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணமும் செய்துக்கொண்டனர். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2017ம் ஆண்டு விவாகரத்து செய்துக்கொண்டனர்.

விவகாரத்திற்கு பின்பு இருவரும் அவரவர் துறைகளில் கவனம் செலுத்தி வந்தனர். கடந்த வருடம் தனது உறவுக்கார பெண்ணை ஏ.எல்.விஜய் திருமணம் செய்துக்கொண்டார். இதனிடையே தான் வேறொருவரை காதலித்து வருவதாக கூறிய அமலாபால், அது யார் என்பது பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தார். ஆனால் அமலாபால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவர் மீது காதலில் இருக்கிறார் என்று தகவல் பரவியது. சில வாரங்கள் முன்பு பவணீந்தர் சிங் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அவர் தான் அமலா பாலின் காதலர் என கூறப்பட்டது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாவில் அமாலாபாலுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படத்துடன் ‘Wedding Throwback’ என்று குறிப்பிட்டும் இருந்தார்.

ஆனால் அந்த புகைப்படங்களை வெளியிட்ட சில மணித்துளிகளில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். ஆனால் அதற்குள் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

அவர்கள் இருவரும் ஏற்கனவே லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், திருமணமும் ரகசியமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Comments are closed.