நினைத்தேன் வந்தாய் அந்த பாடலில் நடித்தது ரம்பாவே இல்லை !! வேறு எந்த நடிகை தெரியுமா ?? உண்மையை உடைத்த இயக்குனர் !!

நினைத்தேன் வந்தாய் தளபதி விஜயின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றியை கொடுத்த படம். இந்த படம் பார்க்க குடும்பம் குடும்பமாக வந்தார்கள் அந்த நேரத்தில். முதலில் இந்த படத்தின் இயக்குனர் செல்வா பாரதி அவர்கள் “நினைத்தேன் வந்தாய்” படத்தில் ஹீரோவா நடிகர் கார்த்திக் அவர்களை வைத்து எடுத்தார். சில நாட்களில் ஏதோ ஒரு பிரச்சனை காரணமாக அந்த படத்தை நிறுத்திவிட்டார். அதன் பின் விஜய் வீடு வழியே சென்று கொண்டு இருந்த செல்வபாரதி விஜயிடம் பேசி பார்க்கலாமே என்று அவருடைய வீட்டிற்கு சென்று கதையை முதலில் SACயிடம் முதலில் சொன்னார்.

 

இந்த படம் “பெல்லி சந்தடி” என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் அந்த படத்தை விஜய் மற்றும் அவர்களது பெற்றோருக்கு திரையிட்டு காண்பித்து உள்ளார். கதை பிடித்து போன விஜய் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று ஒப்பு கொண்டார். இப்படி தான் “நினைத்தேன் வந்தாய்” படத்தில் வந்தார்.

இந்த படத்தில் “வண்ணநிலவே வண்ணநிலவே” என்ற பிரபலமான பாடல் ஒன்று இருந்தது. விதவிதமான சட்டைகளை போட்டு இந்த பாடலை மட்டும் அதிக நாள் எடுத்து கொண்டே இருந்தாராம் இயக்குனர். விஜய் ஏன் இப்படி எடுக்கிறிங்க என்று கேட்டார் ஆனால் அந்த பாடலை அப்படத்தில் பார்த்து விட்டு அருமையாக வந்து இருக்கிறது என்று பாராட்டினார்.

அந்த படத்தில் விஜய் கனவு காணுவது போலவும் ரம்பா கனவில் ஒரு கயிறை பிடித்து கொண்டு தொங்குவது போலவும் அதன் பின் இந்த “வண்ண நிலவே” பாடல் தொடங்குமாம். அந்த பாடலில் வந்தது ரெம்பவே இல்லையாம். ரம்பா அந்த நேரத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து கொண்டு இருந்தார். அதனால் என்னால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது என்று சொல்லி இருக்கிறார். உடனே செல்வபாரதி ரம்பாவுக்கு பதில் வேற ஒரு பெண்ணை போட்டு அவரின் முகத்தை காட்டாமல் ரம்பா போலவே காட்டி இருக்கிறார்.

அது கனவில் வரும் பாடல் அதனால் முகம் தெரியவில்லை என்று சாமர்த்தியமாக கதையை மாற்றினாராம். இந்த படத்தின் பிரிவியூ ஷோ படக்குழுவினர் அனைவர்க்கும் போட்டு காட்டி உள்ளார்கள். அப்போது இந்த காட்சியை பார்த்த ரம்பா செம டென்ஷன் ஆகி அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டாராம்.

Comments are closed.