இளம் வயது நடிகை குஷ்புவுடன் இவ்வளவு அருகில் நின்று போஸ் கொடுத்துள்ள அந்த மூவரும் யார் தெரியுமா..? பழைய நினைவுகளை பகிர்ந்த குஷ்பூ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. 90 கால கட்டங்களில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் இவர். முதன் முதலாக ஒரு நடிகைக்கு ரசிகர்கள் கோவில் காட்டியதும் இவருக்குத்தான். ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்கை, அரசியல் என பிஸியாகிவிட்டார்

கிட்டத்தட்ட கடந்த 9 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மூலம் மீண்டும் நடித்துவருகிறார். இந்நிலையில், மும்பையை பூர்விகமாக கொண்ட இவர், தனது இளம் வயதில் தனது சகோதரர்களுடன் எடுத்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

டீன் ஏஜ் பருவத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில், அவர்களுடன் செல்ல தங்கையாக குஷ்பு காட்சி அளிக்கிறார்.

Comments are closed.