“பார்க்க சகிக்கல, அதை கழட்டுங்களேன்” பிக் பாஸ் ரைசாவின் புகைப்படத்தை டார் டாராக கிழிக்கும் நெட்டிசன்ஸ்…!!

பிக் பாஸ் (தமிழ்) – சீசன் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். தனது அழகு தேகத்தால் இளைஞர்கள் மத்தியில் ரைசா RISE ஆகிக்கொண்டே இருக்கிறார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன். அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார்.

தன்னுடைய கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் இவர் இப்போது கண் புருவத்தில் கடுக்கன் மாட்டிக்கொண்டிருப்பது புகைப்படத்தை வெளியிட்ட, அதனை பார்த்த ரசிகர்கள் “பார்க்க சகிக்கல தயவு செஞ்சு கழட்டிடுங்க..” என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்

 

Comments are closed.