சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சவால் விடுத்த சிரஞ்சீவி.!! இணையத்தில் செம்ம வைரல் வீடியோ…!!

கொரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கால், வரலாறு காணாத அளவிற்கு பெரிய அளவில் சினிமா துறை முடங்கியுள்ளது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒட்டுமொத்த உலக சினிமாவும் தற்போது முடங்கியுள்ளது. இதனால் சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் நடிகர் சங்கத்தில் உள்ள ஊழியர்களுக்கு பெரிய நடிகர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தால் திரை நட்சத்திரங்கள், வீட்டில் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அதே சமயம் ஒருவருக்கு ஒருவர் ‘சேலஞ்சுகளை’ விடுத்துக்கொண்டு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில் டோலிவுட் டாப் நட்சத்திரங்களுக்கு மத்தியில் #BetheREALMAN என்ற சவால் தற்போது பிரபலமாகிவருகிறது. ‘அர்ஜுன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் வங்கா துவங்கிய இந்த சேலஞ்சு, இயக்குநர் ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரைக் கடந்து தற்போது ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி வரை வந்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆரின் சவாலை ஏற்ற சிரஞ்சீவி, தனது வீட்டை சுத்தப்படுத்தி, தனது அம்மாவுக்கு சுட சுட ஊத்தாப்பாத்தையும் சுட்டுக் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

இந்த லாக்டவுன் முழுக்க வீட்டில் இருக்கும் சிரஞ்சீவி, தனது முழு நேரத்தையும் தனது தாயுடன் செலவழித்து மகிழ்ந்துவருகிறார்.இந்த டாஸ்க்கை முடித்த அவர், தனது நண்பர்களான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கும், கே.டி. ராமாராவுக்கும் பரிந்துரைத்துள்ளார். ரஜினிகாந்த் இந்த சவாலை ஏற்றால், கோலிவுட்டிலும் இந்த #BetheREALMAN சவால் வைரலாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

 

Comments are closed.