சச்சினின் சாதனைகளுக்கு பின்னால் இப்படி ஒரு சோகமா…! கண்ணீர்விட்டு அழுத சச்சினின் சோக கதை…!

23

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் தனது முதல் போட்டியிலேயே ஏற்பட்ட அவமானம் குறித்தும் கண்ணீர்விட்டு அழுத கதை குறித்தும் தற்போது பேசியுள்ளார். 1989 ஆம் ஆண்டு 15 வயதே நிரம்பிய சச்சின் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அப்போது வேக பந்துவீச்சில் அந்த அணியின் வாசிம் அக்ரம், இம்ரான் கான் மற்றும் வக்கர் யூனுஸ் கலக்கி வந்தனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்த பிறகு முதல் முறையாக களமிறங்கினார் சச்சின். பள்ளியில் விளையாடிய அனுபவம் மட்டுமே கொண்டிருந்த சச்சின் அந்த போட்டியில் பாக்கிஸ்தான் வேகப்பந்து வீச்சில் உடம்பில் பல அடிகளை வாங்கியுள்ளார்

வெறும் 24 பந்துகளை மட்டுமே சந்தித்த சச்சின் 15 ரன்கள் எடுத்து வக்கர் யூனுஸ் பந்தில் போல்டானார். முதல் போட்டியிலே தனது மோசமான ஆட்டத்தை நினைத்து மிகவும் மனம் வருந்திய சச்சின் குளியல் அறையில் அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதுள்ளார். சச்சினின் அந்த மனம் தளர்வை கண்ட சீனியர் வீரர்கள் அவருக்கு ஆறுதல் அளித்துள்ளனர்.

பின்னர் ரவி சாஸ்திரி அளித்த அறிவுரையின்படி அடுத்த போட்டியில் அரைமணி நேரத்தை கழித்து பின்னர் சிறப்பாக ஆட ஆரம்பித்துள்ளார். அந்த இன்னிங்சிலேயே சச்சின் தனது முதல் அரைசதத்தை அடித்துள்ளார். அதன் பின்னர் அவரது சாதனைகள் தொடர ஆரம்பித்துள்ளன.

 

Comments are closed.