வாணி போஜன் படுக்கையறை காட்சி, வைபவ் வெங்கட்பிரபு அட்ராசிட்டி.. இணையத்தை கலக்கும் லாக்கப் பட ட்ரைலர்

வைபவ் மற்றும் வெங்கட் பிரபு நடிப்பில் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம் லாக்கப். போலீஸ் விசாரணை அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்த கதையை புதுமுக இயக்குனர் சார்லஸ் இயக்கியிருக்கிறார்.
வைபவ் ஜோடியாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு நண்பரான நிதின் சத்யா தயாரித்திருக்கிறார். இவர் இதற்குமுன் சக நண்பரான ஜெய்யை வைத்து ஜருகண்டி என்ற படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க வி சாரணை அ டிப்படையில் உருவான இந்த படத்தில் வெங்கட் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனாலேயே இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

படம் முழுக்க சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. டிரைலரை பார்க்கும்போது வெங்கட்பிரபு செய்யும் வில்லத்தனத்தால் மாட்டிக்கொண்டு எப்படி வைபவ் வெளிவருகிறார் என்பதைப் போல கதை உருவாக்கப் பட்டிருக்கலாம்.

முதன்முறையாக வாணி போஜன் மிகவும் நெருக்கமான படு க்கையறை காட்சிகளிலும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல். லாக்கப் படத்தின் டிரைலர்:

Comments are closed.