ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுக்கு உதவிய லாரன்ஸ்! ஏழைத் தாய் வெளியிட்ட வீடியோ

இந்தியாவில் கொ ரோ னா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே இந்த நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்க நிதி உதவி அளிக்குமாறு மக்களிடம் மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை வைத்திருந்தன. அதற்கேற்ப கொரோனா தடுப்பு பணிகளுக்கு திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்திருந்தார் . அதில், அதில் பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் மற்றும் படப்பிடிப்பு ரத்தால் பாதிக்கப்பட்டு வேலைஇழந்த சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், நடன இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், வாழ்வாதாரத்தை இழந்துவாடும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.75 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். அதோடு மட்டும் நின்று விடாமல் இன்னும் போல உதவிகளை செய்து வருகிறார்

ராகவா லாரன்ஸ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சமூகத்தில் நலிவடைந்தோருக்கு தொடர்ந்து உதவி செய்து வருவதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.இந்நிலையில் அவரது உதவிக்கு நன்றி தெரிவித்து தாய் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒரே பிரசவத்தில் பிறந்த தனது குழந்தைகளின் படிப்பிற்காக 4 வருடங்களாக ராகவா லாரன்ஸ் உதவி வருவதாகவும் தற்போது கொரோனா காலக்கட்டத்திலும் மறுக்காமல் உதவி வருவதாகவும் அவருக்கு உணர்ச்சி பெருக்குடன் நன்றி தெரிவித்தார்.

Comments are closed.