14 தனிமை படுத்த பட்டு பல மாதங்களுக்கு பின் குடும்பத்தை சந்தித்த சஞ்சய் மகிழ்ச்சியில் தளபதி விஜய்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார். மேலும் குறும்படங்களிலும் நடித்துள்ளார் இந்நிலையில், உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சர்வதேச விமான நிலையங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சென்னைத் திரும்ப முடியாமல் கனடாவில் தவித்து வருவதாகவும், இதனால் நடிகர் விஜய் மிகுந்த கவலை அடைந்திருப்பதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

ஆனால், இதற்கு விஜய் தரப்பினர் அதனை மறுத்து, கனடாவில் சஞ்சய் பாதுகாப்பாகவும், மிகவும் நலமாக இருப்பதாகவும் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் பதில் அளித்திருந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஜேசன் சஞ்சய் விமானத்தின் மூலம் சென்னை திரும்பியுள்ளார். பின்னர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவர் 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பி தனது பெற்றோரை சந்தித்துள்ளார் எனவும், இதனால் விஜய் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

Comments are closed.