நானும் ஹீராவும் ஏன் பிரிந்தோம் ?? முந்தைய காதலை பற்றி முதல்முறையாக மனம் திறந்த அஜித் !!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் அமராவதி தொடர்ந்து இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை வரை அஜித் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். நடிப்பையும் தாண்டி நடிகர் அஜீத்துக்கு கார் பைக் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம். இந்த போட்டியில் கலந்து கொண்ட போது விபத்து ஏற்பட்டு இதனால் தனது முதுகில் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் அஜித்.
யார் வைத்த சூனியமோ தெரியல அவ்வபோது படப்பிடிப்பில், அப்போ அப்போ இவருக்கு Accident ஆகிறது. இருந்தாலும் ஷூட்டிங் நிற்க கூடாது என்பதால் தள்ளிப்போடமல் தொடர்ந்து அந்த வலியில் நடித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு கூட வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் Bike – இல் இருந்து கீழே விழுந்து, கொஞ்சம் கை முறிவோடு தப்பித்துவிட்டார். ஆனாலும் வலியோடு ஷூட்டிங் நிறுத்தாமல் கலந்து கொண்டார். அதன் பிறகு ஊரடங்கு காரணமாய் ஷூட்டிங் நடக்காமல் ஆகஸ்ட் மாதம் துவங்கலாம், என்ற ஐடியாவில் இருக்கிறார்கள். இப்படி போனா படம் பொங்கலுக்கு ரிலீஸ் போல இருக்கு என்று ரசிகர்களே முடிவு செய்து விட்டனர்.

இந்த நிலையில் ரசிகர்கள் நேற்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு 9 மில்லியன் Tweets போட்டு ரெக்கார்டு வைத்தார்கள். அதிலும் சில ரசிகர்கள் அஜித்தின் பழைய பேட்டிகளை பதிவிட்டு வைரல் ஆக்கினார்கள். அதில் ஒரு பேட்டியில் தனது முந்தைய காதலைப் பற்றி அஜித் மனம் திறந்துள்ளார். அதில், “ஒரு நடிகன், இப்படி இருக்கக் கூடாது, உன்னோட உணர்வுகளை இப்படி திறந்த புத்தகமாக்கக்கூடாதுனு நிறைய பேர் சொல்றாங்க. ஏன் அப்படின்னு எனக்குப் புரியல. நான் ஏன் என்னைப் பற்றி யார்ட்டயும் சொல்லாமல் மறைக்கணும்? போன மூணு வருஷத்து இன்டர்வியூக்களைப் புரட்டினீங்கன்னா அதுல ஹீரா இல்லாத இன்டர்வியூவே கிடையாது.

நானும் ஹீராவும் லவ் பண்ணினோம்னு எல்லார்கிட்டயும் சொன்னேன். லவ்தானே பண்ணினேன். லவ்ங்கிறது உயர்ந்த விஷயம்தானே, அதுக்கப்புறமா எங்க ரெண்டு பேருக்கும் சில விஷயங்கள் சரிப்பட்டு வரல. ஸோ பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணிட்டோம் ” என கடந்த காதலை பற்றி இவ்வளவு தெளிவாக, இவ்வளவு தைரியமாக பேட்டி கொடுப்பது அஜித்தால் மட்டுமே முடியும், என்று சில மூத்த பத்திரிக்கையாளர்கள் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.

Comments are closed.