திருமணத்திற்கு முன் சிவகார்த்திகேயனுடன் ரொமான்ஸ் செய்த பிரியா அட்லீ…!!!வெளியான வீடியோ

பிரியா, தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். இவருடைய காதல் மனைவி தான் பிரியா. இவருடைய உண்மையான பெயர் கிருஷ்ணா பிரியா. இவர் முதல் முதலில் “காண காணும் காலங்கள்” என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து கொண்டு இருந்தார். அதன் பின் சிறு சிறு குறும்படங்களில் நடித்து கொண்டு இருந்தவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து கார்த்தியின் “நான் மகான் அல்ல” படத்தில் கார்த்திக்கு தங்கையாக நடித்து இருந்தார்.


சிவகார்த்திகேயனும் ப்ரியாவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து குறும்படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். அட்லீ தனது நண்பன் சிவகார்த்திகேயனை வைத்து “முகப்புத்தகம்” என்ற குறும்படத்தை எடுத்து உள்ளார். இந்த குறும்படத்தில் ஹீரோயினுக்கு சிவகார்த்திகேயனின் உண்மையான மனைவி பெயரே வைத்தார் சிவா.


இயக்குனர் அட்லீக்கு சிவகார்த்திகேயன் ப்ரியாவை அறிமுகம் செய்து வைத்துள்ளார் பல வருடங்களுக்கு முன். நண்பர்களாக இருந்த அட்லீ அதன் பின் ப்ரியாவிடம் காதலை ப்ரொபோஸ் செய்து காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது பிரியா அட்லீயுடன் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த குறும்படம் வைரல் ஆகி வருகிறது.இந்த வீடியோவை பார்த்து அப்போவே இப்படியா என ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ

Comments are closed.