பொன்னியின் செல்வன் படத்திற்காக வேற லெவலில் உடலை ஏற்றியுள்ள ரியாஸ் கான் !! கதாபாத்திரம் இதுதான் !!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்களில் மிகப்பெரும் பங்கு வகிப்பவர் ரியாஸ் கான். வில்லனாகவும் பல படங்களில் நடித்தவர். அ டிப்படையில் பாடிபில்டர் ஆன இவர், முதலில் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர். பிறகு அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவுக்கு வந்தவர். தற்போது வரை குணச்சித்திர நடிகர்களில் முக்கியமான பங்கை வகிக்கும் இவர், சமீபத்தில் தன் மகனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்தார்.

தமிழில் பல படங்களில் இவர் சிறப்பான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.குறிப்பாக வின்னர் திரைப்படத்தில் இவர் நடித்த கட்டதுரை கதாபாத்திரம் மக்களிடையே இன்றும் பேமஸ்.மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் தேர்ந்தவரான இவர் எப்போதும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சிக்ஸ் பேக் உடலை காட்டியது போல் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.47 வயதாகும் இவர் இந்த வயதிலும் உடலை இவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை பார்த்து வாயைப்பிளந்துள்ளனர்.

மேலும் அந்த புகைப்படத்தில் அவர் வைத்திருக்கும் சிக்ஸ் பேக் உடலமைப்பு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்காக எனக்கூறி மேலும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகியது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், நடிகர் பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Riyaz Khan (@riyazkhan09) on

Comments are closed.