பலரை மன்னிப்பு கேட்க வைத்த லஷ்மி ராமக்ரிஷ்ணனையே சாரி என சொல்ல வைத்த வனிதா..!! வனிதாவா கொக்கா!!

கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பீட்டர் பால் ஏற்கனவே தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றும் அவருக்கு பெரிய மகன் உள்ளார் என்றும் அவரது மனைவி வனிதா மீது புகார் கொடுத்ததை தொடர்ந்து இந்தத் திருமணப் பேச்சு மேலும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதன் பிறகு வனிதா இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றின் மூலம் பேசியிருந்தார். இந்தத் திருமணம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வனிதா திருமண செய்தியை இப்போது தான் நான் பார்த்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். விவாகரத்தும் ஆகவில்லை படிப்பு மற்றும் அனுபவம் உள்ள ஒருவர் எப்படி இவ்வாறு செய்ய முடியும். வனிதா திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகார் அளிக்கவில்லை? திருமணத்தை நிறுத்த வில்லை.? என்பதும் புதிராக உள்ளது என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வனிதா உங்களுடைய வேலையை மட்டும் பாருங்கள் இது பிக்பாஸ் நிகழ்ச்சி அல்லது நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அல்ல. இது என் வாழ்க்கை யாரும் உங்களை இங்கு வக்கீலாக ஆஜராக சொல்லவில்லை என்று ட்விட் செய்திருந்தார்.

இது குறித்து பல சர்ச்சைகள் கிளம்பி வந்த நிலையில் தற்போது வனிதா லஷ்மி ராமகிருஷ்ணன் அவருக்கு பதில் கொடுத்துள்ளார். வனிதா விஜயகுமாரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் அப்படி செய்திருக்கக் கூடாது. நான் உங்கள் திருமண செய்தியை பெரியதாக்கி இருக்க கூடாது. இதை தெருச்சண்டை போல் ஆகிய மீடியாவுக்கு நன்றி. உங்களை பற்றி அனைத்துக் கருத்துக்களையும் நீக்கி விட்டேன் நீங்கள் சொன்னது போல் எனக்கு நிறைய கடமைகள் உள்ளன ஏழைக் குழந்தைகளுக்காக குரல் கொடுப்பேன் ஜஸ்டிஸ் பார் ஜெயப்பிரியா என ட்வீட் செய்துள்ளார்.

Comments are closed.