தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் பிரபல ஹீரோ! மகிழ்ச்சியில் வாழ்த்து கூறிய ரசிகர்கள் அட இதனை படம் நடித்த நடிகரா!!

வ றுமை காரணமாக இந்தி பட நடிகர் ஜாவேத் ஹைதர் தள்ளுவண்டியில் காய்கறி விற்று பிழைப்பு நடத்துகின்றார். சல்மான் கானின் தபாங் 3, ஆமிர்கான், ராணி முகர்ஜி நடித்த குலாம், பாபர், லைஃப் கி ஐஸி கி தைஸி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஜியான்னி அவுர் ஜூஜூ என்ற டிவி தொடரிலும் நடித்துள்ளார்.
இவர் காய்கறி விற்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானதில் ரசிகர்கள் க டு ம் அ தி ர் ச்சியில் உள்ளனர்.

சில நெட்டிசன்கள், இந்த இக்கட்டான நிலையில், நேர்மறையான உங்கள் செயலை மதிக்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்’ என்று தெரிவித்துள்ளனர்.

ஒருவர், நம்பிக்கையை இழக்காமல் நீங்கள் செய்கிற இந்த விஷயம் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கின்றன. குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள என்ன முடியுமோ அதை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.ஜாவேத் நிதி நெருக்கடியுடன் போராடுகிறார் என்பதை குறிப்பிட்டு, டோலி பிந்த்ரா தனது ட்விட்டர் கணக்கில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவைப் பகிரும்போது, ​​டோலி பிந்த்ரா, “பிரபல நடிகர், இன்று காய்கறிகளை விற்பனை செய்கிறார்,” என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜாவேத் நிலை குறித்து அவரது ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஜாவேத் இதுகுறித்து பெரிதும் கவலை இன்றி வாழ்கின்றார். தான் இந்த வீடியோவில் நடித்துள்ளபோதும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனமாடி காய்கறிகளை விற்கிறார்.

Comments are closed.