மன்மதன் படத்தில் சிம்புவை ஏ மாற்றும் பெண்ணாக நடித்த நடிகை சிந்து துலானி இப்போ குழந்தை குட்டியோடு எப்படி இருக்காங்க தெரியுமா??

தனுஷ் நடித்த சுள்ளான் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகை சிந்து துலானி.
அதையடுத்து சிம்புவின் ம ன்மதன் திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்திருந்தார். அதன் பின் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு வரிசையாக பல படங்களில் நடித்து பிரபலமானார்.மேலும், தமிழில் ஒரு சில படங்களில் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வந்தார்.

விக்ரம், அசின் நடிப்பில் வெளியான ‘மஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நடிகை சிந்து துலானி. அந்தப் படத்திற்குப் பின் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. ஆனால், தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

அதனை தொடர்ந்து இவரது நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது அவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிந்து துலானியா இப்படி மாற்றிவிட்டார் என்று ஷாக் ஆகியுள்ளனர்.

Comments are closed.