நடிகை சினேகா மீது காதல் மலர்ந்தது எப்படி? பிரசன்னாவின் காதல் பதில் இந்த படத்தில் இருந்துதான் சினேகா மேல் காதல்

திரையில் உருக உருக காதலிக்கும் நடிகர் நடிகைகள், நிஜ வாழ்க்கையிலும் காதல் செய்து தம்பதிகளாக இணைவது ஒன்றும் புதிதான விடயமல்ல. காதலித்து திருமணம் செய்வது எவ்வளவு கடினமோ. அதே போல தான் திருமணத்திற்கு பிறகு வாழ்ந்து காட்டுவதும். என்னதான் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும் , அவற்றையெல்லாம் பெரிதுபடுத்தாமல் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதலில் தீர்மானமாக இருந்தாலும், அங்கு பிரிவு என்ற ஒன்றிற்கே இடமிருக்காது. அப்படி, காதலித்த கரம் பிடித்து தற்போது வெற்றிகரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் சினேகா பிரசன்னாவின் காதல் கதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தமிழ்த்திரை உலகில் கொடிகட்டி பறந்த சினேகா, அப்போது வளர்ந்து வரும் நடிகரான பிரசன்னாவை காதல் திருமணம் செய்தார்.

அ ச்சமுண்டு, அ ச்சமுண்டு திரைப்படத்தின் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தபோது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டாலும், பிரசன்னாவுக்கு முன்னரே சினோகாவை பிடிக்குமாம். 2012 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலிப்பதாக கி சுகிசுக்கள் வெளியாகின. ஆனால் அதனை இருவரும் மறுத்து வந்தார்கள். அதன்பின்னர், அந்த ஆண்டில் வந்த காதலர் தினம்(பிப்ரவரி 14) அன்று, இருவரும் ஜோடியாக பத்திரிகைகளுக்கு ‘போஸ்’ கொடுத்து காதலை உறுதிப் படுத்தி, பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள்.

சினேகாவுடன் காதல் மலர்ந்தது பற்றி பிரசன்னா கூறியதாவது, அ ச் சமுண்டு அ ச் ச முண்டு படத்தில் இணைந்து நடித்தபோது எங்களுக்குள் தொழில் ரீதியான பழக்கம்தான் இருந்தது.
படம் முடிந்தபிறகு ஒருத்தரை ஒருத்தர் பேசாமல் இருக்க முடியவில்லை. போனிலும், எஸ்.எம்.எஸ். மூலமும் பேசி நெருக்கமானோம்.

அதன்பின்னர் எங்கள் இருவருக்குள் காதல் மலர்ந்தது. சினேகாவிடம் நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்துள்ளது. ரொம்ப வித்தியாசமானவர். பெரிய நடிகையாக இருந்தும் எளிமையாக இருப்பார். மூத்தவர்களை மதிக்கக்கூடியவர். குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கிறார். இதனால்தான் அவர்மேல் காதல் வயப்பட்டேன்.

அதேபோல் ராமதாசு என்ற தெலுங்கு படத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படமும் எனக்கு சினேகாவை பிடிக்க காரணமாக இருந்தது என கூறியுள்ளார். இதில், சுவாரசியம் என்னவென்றால், பிரசன்னா இதுவரை தன்னிடம் ஐலவ்யூ சொன்னதே இல்லை என்று செல்லமாக ஒரு பேட்டியின் போது கூறியிருந்தார்.

சினேகாவின் பெற்றோர்களும், பிரசன்னாவின் பெற்றோர்களும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, 2012 மே 11 ஆம் திகதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இவர்களது திருமணம் சிறப்பாக நடந்ததுகாதல் ததும்ப இல்லறம் நடத்தி வரும் இந்த தம்பதியினருக்கு விகான் என்ற அழகிய ஆண் குழந்தை உள்ளது.

Comments are closed.