நேசம் உல்லாசம் திரைப்படத்தில் நடித்த மகேஸ்வரி இப்போ எப்படி அப்படி இருக்காங்க பாருங்க!! ஆளே அடையாளம் தெரியல!!

தமிழ் சினிமாவில் உ ல்லாசம் என்னும் திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்த படத்தில் நடிகை மகேஷ்வரி திரையுலகத்திற்கு அறிமுகமானார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் நடிகை மகேஷ்வரி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழில் பாஞ்சாலகுறிச்சி, நாம் இருவர் நமக்கு இருவர், நே சம், உ ல் லாசம், சுயம்வரம் போன்ற பல சூப்பர் ஹிட்டான படங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டது. இதனால் வெள்ளித்திரையில் இருந்து இவர் சின்னத்திரைக்கு மாறியுள்ளார். சின்னத்திரையில் “அதே கண்கள்” என்னும் சீரியலில் நடித்துள்ளார்.

இவருக்கு நடிப்பது மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும் இவருக்கு மிகவும் ஆர்வம் உண்டு. இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்று நினைத்து தனது ஆடை வடிவமைப்பு வேலையையும் செய்து கொண்டுதான் இருந்தார். தற்போது, அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லை என்பதற்காக முழு கவனத்தை தனது ஆடை அமைப்பிலேயே செலுத்தி விட்டார்.

இதேவேளை, ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் தனது ஆடை வடிவமைப்பிற்கும் முழு உதவியாக இருந்தவர் எனது சித்தி ஸ்ரீதேவி தான் என்று பல பேட்டிகளில் கூறியுளளார்.

நான் வடிவமைக்கும் ஆடையைத் தான் எனது சித்தி போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வார் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது அவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் வடிவமைத்த ஆடைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

Comments are closed.