நடிப்பை பார்த்து நக்கலா சிரித்த பெண் 15 வருஷமாக நடிக்காத சிவகுமார் யார் எந்த பெண் எந்த காட்சி தெரியுமா!!

தமிழ் சினிமாவில் 70களில் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் இயக்குநர் ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கத்தில் அறிமுக நடிகராக துவங்கியவர் நடிகர் சிவக்குமார். இதையடுத்து பல படங்களில் பல முன்னணி ஜாம்பவான் இயக்குநர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து 80, 90 களில் மூத்த நடிகராக பல விருதுகளை பெற்று மேடை நாடகத்திற்கு தூணாக அமைந்து வந்தார். மேலும் இவரை தொடர்ந்து அவரது இரு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து தற்போது அவர்களின் வளர்ச்சியை கண்டு கொண்டாடி வருகிறார். இதன்பின் திரைப்படங்களை விட்டுவிட்டு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட பிரபல தொடர்களில் நடித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிவக்குமார் கடந்த 15 வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை என்ற கேள்வி பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்ற கர்வத்தோடு இருந்து வருகிறார் என்று அவரிடம் போகும் இயக்குநர்கள் கூறி வருகிறார்களாம்.
இதற்கு காரணம் 2005ல் நடந்த ஒரு சம்பவம் தான் என்று கூறப்படுகிறது. இதை சில மாதங்களுக்கு முன் நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டியொன்றில் சிவக்குமார் உறுதி படுத்தியுள்ளார்.

2005ல் முக்கிய சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது எமோஷ்னல் காட்சிகள் எடுக்கப்பட்டது. அதை நான் நடித்து கொண்டிருக்கும் போது நான் அழுவும் நிலையை கண்ட அங்கிருந்த நடிகை ஒருவர் ஏ ளமாக சிரித்தார்.
காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்தபிறகு அந்த நடிகையிடம் சென்று கத்தியுள்ளார் சிவக்குமார். பின் அந்த சீரியலில் இயக்குநர் என்னிடம் வந்து ஏன் அவரை கோப்பட்டு மி ரட்டுகிறீர்கள், எதுவாக இருந்தாலும் டப்பிங்கிள் பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த நடிகைக்கு சாதகமாக பேசியுள்ளார்.

தன் சினிமா அனுபவ வருடங்களே அந்த நடிகையின் வயதிருக்கும் நிலையில் தன்னை அசிங்கப்படுத்திய மரியாதை கொடுக்காததால் நடிக்க மாட்டேன் என்றும் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதுவரையில் அதற்காக நடிக்க வேண்டாம் என்ற வைராக்கியத்தோடு 15 ஆண்டுகளாக ஒதுங்கி வருகிறார் சிவக்குமார்.

Comments are closed.